உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்!!


உயிர்த்த ஞாயிறு தாக்குத சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாட்டின் செல்வாக்கு மிக்கநபர்கள் காணப்படுவதால் அது குறித்த உண்மைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

2019 இல் மூன்று தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் குண்டைவெடிக்கவைத்தவர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் இதன் காரணமாக நீதிக்கான எங்கள் அழுகுரல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நீதி கிடைக்கவேண்டும்  என கத்தோலிக்கர்களாகிய நாங்கள் தொடர்ந்தும் பிரார்த்தனை செய்யவேண்டும்.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை முன்னைய அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க நபர்களும் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்களுமே தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தனர் எனினும் தேவாலயத்தை பராமரிப்பவர்கள் உட்பட அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டனர் அவர்கள் தாக்கப்பட்டனர் அவர்களின் கையொப்பங்களை பலவந்தப்படுத்தி சில ஆவணங்களில் பெற்றுக்கொண்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

No comments