வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!


வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த குடும்பஸ்தரைத் வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலில் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுட்ன ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.

குறித்த  சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். . 

இந்நிலையில், சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேநேரம் இரத்தினபுரி-லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments