மற்றொரு துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!


இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரத்கம, கம்மத்தேகொடவில் உந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் ரி-56 ஆயுதத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 47 மற்றும் 29 வயதுடைய இருவர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ரத்கம காவல்துறையினர் தொிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments