வவுனியாவில் முதியவரின் சடலம் மீட்பு


வவுனியாவில் முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தின் வெளிப்புறத்தில் சடலம் ஒன்று இருப்பது கவனித்த வர்த்தகர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்கியதை அடுத்து  சம்வ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சடலத்தை மீட்டனர்.

சடலம் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை கிடைத்ததும் முதியவரின் இறப்பு தொடர்பில் காரணத்தைக் கூறமுடியும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முதியவர் இதுவரை இனம் காணப்படவில்லை. அவர் நீல நிற பெட்டிச் சட்டையும், சாரமும் அணிந்திருந்தாகவும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments