பாரிஸ் விமான நிலையத்தில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்: விமானங்கள் இரத்து!!


பாரிஸ் சார்ஸ்லஸ் டி கோல் (Charles de Gaulle) செக்-இன் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  17 வீதமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

திகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க 3.5 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய அனைத்து ஊழியர்களுக்கும் மாதத்திற்கு € 300 யூரோக்கள் பொது ஊதிய உயர்வைக் கோருகிறது.

விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை தடைபடலாம் என்றும் பயணிகள் பாரிஸிலிருந்து விமான நிலையத்திற்கு தொடருந்தில் செல்லுமாறு பரிந்துரைக்கபட்டுள்ளது.

இதேநேரம் பாரிஸின் தெற்கே உள்ள ஓர்லி விமான நிலையம் பாதிக்கப்படவில்லை.

No comments