கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக்கொலை


கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விவேகானந்தா மாவத்தையில் தாக்குதலுக்கு உள்ளானவர் மற்றொருவருடன் வீதியில் அருகில் உரையாடி கொண்டிருந்தபோது  உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் ஒருவர் உந்துருளியிலிருந்து இறங்கி வந்து காயமடைந்த நபரின் தலைமீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றார்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.No comments