யானையில் ஏற தயாராகும் தொலைபேசிகள்!எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாகவும் அடுத்து இடம்பெறும் தேர்தல்கள் அக்கட்சியின் சார்பில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய பல சுயேட்சை குழுக்களுமே ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக அறியமுடிகிறது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எழுச்சியை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலர் ஐ.தே.கவில் இணைந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்தக் கட்சிகளுடன் கொண்டுள்ள கருத்து முரண்பாடுகளினால் அவர்கள் ஐ.தே.கவில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

  

No comments