தம்பதிகள் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது!


கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதிகள் நேற்றிரவு டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 27ஆம் திகதி கல்கிசையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் குறித்த தப்பதியினர் தேடப்பட்டுவந்தனர்.

சந்தேகநபர்கள் டுபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கல்கிசை காவல்துறையினர் விமான நிலைய காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர்களுக்கு எதிராக தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-653 விமானத்தில் டுபாய்க்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

31 வயதுடைய ஆணும் 19 வயதுடைய பெண்ணும் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments