யாழில் உந்துருளியின் பாகங்கள் திருட்டு அதிகரிப்பு


யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் உந்துருளிலிருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வரிசையில் விடப்பட்ட உந்துருளியின் ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட "ஜப்பான் 200" ரக உந்துருளியின் ஒரு பக்கம் பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார். 

இவ்வாறாக வரிசைகளில் இரவு வேளைகளில் விடப்படும் உந்துருளியின் , பக்க கண்ணாடிகள் , சிக்கனல்கள் ,  கோர்ன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

No comments