பதறித்துடித்த சுமந்திரன்!



கோத்தபாய பதவியிறஙகும் வரை யப்பானின் உதவி கிடடாதென யாழ்ப்பாணதத்தில் கூட்டமைப்பிடம் யப்பான் தூதர் தெரிவித்தமை சர்ச்சகைளை தோற்றுவித்துள்ளது.

இதனையடுத்து கோத்தாவை நேரில் சந்தித்து யப்பானிய தூதர் விளக்கமளிக்கும் வரை நிலைமை சென்றுள்ளது.

அவருடன் ஓடொடிச்சென்று சுமந்திரனும் புதிய விளக்கததையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி உறுதியளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை ஜப்பான் தொடர்ந்து பேணுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments