அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்: போயிங்கைக் கைவிட்டு ஏர் பஸ்ஸிடம் விமானங்களை வாங்கும் சீனா!


அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தப் போரில் சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான சீனா சவுத்தேர்ன் (China Southern), ஏர் சீனா (Air China), ஷென்சென் ஏர்லைன்ஸ் (Shenzhen Airlines) மற்றும் சீனா ஈஸ்டர்ன் (China Eastern) ஆகிய நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 37 பில்லியன் டொலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏமாற்றமடைந்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நிலவும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.

No comments