சுமந்திரனிற்கு பஞ்சமேயில்லை!

 

பெற்றோலிற்கு வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைய கூட்டமைப்பின் பேச்சாளர் மோட்டார் சைக்களில் வலம் வருவது வைரலாகியுள்ளது.

உரம் பஞ்சத்தின் போது விவசாயியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு எம்.ஏ.சுமந்திரன் தற்போது தனது பாதுகாப்பு படையணியின்றி மோட்டார் சைக்கிளில் புகைப்படப்பிடிப்பு நடத்தியிருக்கின்றமை தொடர்பில் நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

இதே நாளில் எமது யாழ்ப்பாணத்தில், வடமாகாணத்தின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் கோலோச்சும் மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கலாக சுகாதார துறை உத்தியோகத்தர்கள் அனைவரையும் பல மணி நேரம் கொழுத்தும் வெயிலில் வரிசைகளில் நிற்க வைத்து எரிபொருள் விநியோகித்து கௌரவிக்கப்பட்டனர்.

பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட மக்கள் யாழ்ப்பாணத்திற்கு தேடி வருகின்ற பல மருத்துவ நிபுணர்களும் இன்று எரிக்கும் வெயிலில் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. பல மருத்துவர்களுக்கு இன்றைய நிகழ்வு அவர்களது வாழ்வில் முதல் தடவையாக கூட இருக்கலாம். அது வேறு விடயம்.

மருத்துவர்களை எல்லாம் பல மணி நேரம் காக்க வைத்தது சரியா? பிழையா? என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. அண்ணளவாக 2,700 உத்தியோகத்தர்களுக்கு மேல் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை உட்பட யாழ்ப்பாணம், தீவகம், வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள சுகாதார திணைக்களங்கள், வைத்தியசாலைகளை சேர்ந்த அண்ணளவாக ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நல்லூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகம் மேற்கொள்ள திட்டமிட்டு, உத்தியோகத்தர்கள் நள்ளிரவு முதல் வரிசைகளில் நின்ற போதும் காலை  10 மணியளவிலேயே விநியோக நடவடிக்கையை ஆரம்பித்து இரவு வரையிலும் விநியோகிக்க வைத்து, இன்றைய நாளை தமது முட்டாள்தனமான முகாமைத்துவ தீர்மானமெடுத்தலினது சிறந்த உதாரணமாக உரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார் ஒரு வலைப்பதிவர். 




No comments