பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்: போராட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்!பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாடத்தின்போது, காயமடைந்த 24 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தினுள் நுழைந்து பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றினர்.No comments