தப்பியோடுபவர்களிடையே திரும்ப முற்பட்டவர் கைது!இலங்கையிலிருந்து தப்பி செல்ல முற்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகின்ற நிலையில் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்ப முற்பட்ட ஒருவர் கைதாகியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி வர முயன்ற ஒருவர் இராமேஸ்வரத்துல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து 2019ஆம் ஆண்டு  தமிழகத்திற்குச் சென்ற நிலையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் அகப்பட்டு சில மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். அவ்வாறு சிறையிருந்தவர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் இராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு படகு மூலம் தப்பிச் செல்ல இன்னுமொருவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவரையும் அதற்காக ஏற்பாடு செய்து கொடுத்தவரையும் இராமேஸ்வரத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments