போராட்டமா?அலறும் கோத்தா!இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கெட் மாவத்தை, ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக அல்லது புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேறு எந்த இடத்திற்குள்ளும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘சேவ் ஸ்ரீலங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசட் அறக்கட்டளையின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய களுபோவில பதும தேரர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராக இருந்தனர்.

அவ்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் வீதியில் வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு, சிரமம், இன்னல்கள் ஏற்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, குறித்த நபர்களை அந்த இடத்திலோ அல்லது குறித்த எல்லைக்குட்பட்ட வேறு இடத்திலோ போராட்டத்தை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

No comments