இந்து மதத்தலைவர்களுடன் பலாலிக்கு வருகின்றது விமானம்!அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக விமானங்களிற்கு காத்திருக்க பலாலிக்கு தனியார் விமானமொன்று நாளை முதலில் வருகை தரவுள்ளது.

திருவாடுதுறை ஆதீன குருமுதல்வர் அடங்கிய முதலாவது விமானம் நாளை  சென்னையில் இருந்து   பலாலியை வந்தடைகின்றது.

திருவாடுதுரை  ஆதீணம் குருமுதல்வர் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் பயணிக்கும் சிறிய விமானம் ஒன்று 27 மாத இடைவெளிகளின் பின்னர்  நாளை பலாலியில் 1வது சர்வதேச விமானமாக தரை இறங்குகின்றது.

இவ்வாறு பலாலி வரும் விமானமானது ஓர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட   விமானம் என்பதுடன் 12 பேர் மட்டுமே பயணிக்கும் விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்த விமானத்தில் வருகை தரும்  திருவாடுதுறை ஆதீன குருமுதல்வர் தம்பிரான் சுவாமிகள் நல்லூர், திருக்கேதீஸ்வரம், கீரிமலை நகுலேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களிற்கும் பயணிக்கவுள்ளார்.

No comments