எரிபொருள் வரிசை மரணம் தொடர்கிறது!இலங்கையில் நாள் தோறும் எரிபொருளிற்கு காத்திருக்கின்ற மக்கள் மரணிப்பது வழமையாகிவருகின்றது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர்,  திடீர் நோய்வாய்ப்பட்ட  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிதப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஓட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments