அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக அரசியலமைப்பின் 40(1)(C) பிரிவின்படி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

No comments