ஜூலி சங் - ரணில் சந்திப்பு: அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் என்ற ட்வீட்!


இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு இலங்கை எவ்வாறு வந்தடைந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.  பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியான இந்த கட்டத்தில் அது எவ்வாறு வந்தது, எப்படி நாம் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் என்று சுங் ட்வீட் செய்துள்ளார்.

எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர், நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலரும் என்று அவர் கூறினார்.

No comments