முனைப்படையும் இலங்கை-இந்திய:ஏற்றுமதி-இறக்குமதி!

 
இந்தியாவில் இருந்து கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 400 லீற்றர் டீசலுடன் ஓர் படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு மீனவர்கள் ஓர் படகில் 400 லீற்றர் டீசலை உடமையில் வைத்திருந்தபோதே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

டீசல் ஏற்றிய படகு மண்ணெண்ணையில் இயங்குகின்றபோதும் மேலதிக கான்களில் டீசல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டே படகும் மீனவர்களும் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கிலோ கடல் அட்டையை இந்தியப் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை கடத்திய குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதப்படுத்திய 400 கிலோ கடல் அட்டையின் இந்தியப் பெறுமதி 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது

.

No comments