6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

 


மீண்டும் மன்னாரில் இருந்து ஆறுபேர் ஏதிலிகளாக இன்று திங்கட்கிழமை காலை தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

இரண்டு சிறுவர்கள், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தமாக 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீட்க இந்திய கடலோர படைக்குச்  சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் நேற்று (10) இரவு 08.00 மணிக்கு  தலைமன்னாரில் இருந்து இந்தியா நோக்கி படகொன்றில் பயணமாகி, இன்று காலை 7 மணிக்கு, தனுஷ்கோடி- அரிச்சல்முனை மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படகில் பயணிக்க 4,40,000 ரூபாயை  செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்கள் வவுனியா- நெலுக்குளம் பறையாளங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments