இராஜினாமா கடிதத்தில் கோத்தா ஒப்பமிட்டார்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுதாகவும், அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் அறிவிப்பை நாளை வெளியிடுவார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments