போராட்டகாரர்களிற்குள் குழப்பம்: மனோ!
கோத்தபாயவின் பதவி பறிப்பின் பின்னரான சூழலை பற்றி மனோகணேசன் வெளியிட்டுள்ள தகவலில் போராட்டகார்களிடையே பிளவு ஏறபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழ் மக்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அவர் கோரியிருக்கிறார்.
இன்று பிற்பகல், போராட்டக்குழுக்களின் ஒரு பிரபல குழு, பாராளுமன்ற அரசியல் கட்சிகளை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணி பங்குபெறும். ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன என நினைக்கிறேன்.
நேற்று இரவு என்னிடம் உரையாடிய இந்த போராட்டக்குழு நண்பர்களுக்கு, நாம் ஒடுக்கப்பட்ட இனங்களின் பிரதிநிதிகள். எமது மக்களின் அபிலாஷைகளை எம் மூலம் புரிந்துக்கொள்ளுங்கள். ஏனைய தேசிய பெரும்பான்மை கட்சிகளுடன் உங்கள் கோபதாபங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
இந்த குழுக்கள் மத்தியிலும் ஐக்கியம் இல்லை. கூட்டிணைவு இல்லை. முரண்பாடுகள், அடிதடி, சண்டை, வெட்டுகுத்து, காயம், ஏற்பட்டுள்ளன.
சர்வ கட்சி போராட்டக்காரர்கள் என்று உள்ளனர். கட்சி சார்பற்ற போராட்டக்காரர்கள் என்றும் உள்ளனர். சில கட்சிகளால் பின்னாலிருந்து இயக்கப்படும் குழுக்களும் உள்ளன. இந்த எதிலும் ஒட்டாத குழுக்களும் உள்ளன.
இந்த களநிலைமை அனைத்தும் அறிந்தே நான் உள்ளேன். இந்நிலைமைகள் நமக்கு புதிதல்ல. ஒரே இலக்கை நோக்கி ஆயுதம் தூக்கிய தமிழ் போராளி குழுக்கள் தமக்குள் சுட்டுக்கொல்லவில்லையா?
எமக்கு இவை ஒரு இடைவெளி (Space). மேடை. இவற்றுக்குள் நுழைந்து நமது பிரச்சனைகளை முன் வைப்போம். என் நோக்கம். அவ்வளவுதான். என மனோகசேணன் தெரிவித்துள்ளார்.
இதற்குள் தமிழ் கட்சிகாரர்கள், “நான், நீ” என முரண்படாமல் இருந்தால் சரி..! இந்த குழுக்களிடம் போய் “நாட்டை கொடு, வீட்டை கொடு” என கேட்பதில் பயனில்லை.
எமது அடிப்படை கோட்பாடுகளை சொன்னாலே போதும் என நினைக்கிறேன் என்றார்.
Post a Comment