2 லட்சத்து 61 ஆயிரம் மூடை:கிளிக்கு 40 மட்டுமே!

நாட்டிற்குள் எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 61 ஆயிரம் மூடை உர விநியோகத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்..

அதாவது கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிறுபோக விதைப்பு இறுதித் திகதி 2022-04-30 என கணக்கிடப்பட்டபோதும் உழவிற்கான எரிபொருள் இன்மையால் 2022-05-31 ஆம் திகதியை தாண்டியும் விதைப்பு இடம்பெற்றது. அதாவது தறபோது 27 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மாவட்டத்தில்  விதைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் ஏக்கர் அறுவடையை அண்மித்துவிட்டது. அதேநேரம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் நிலம் 45 நாள் பயிரிலேயே உள்ளது. இந்த 45 நாள் பயிர்களிறகு தற்போது உரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். 

இதேநேரம் மாவட்டத்தில் முழுமையான வயல் அறுவடைக்கு தயாராகிவிட்டது. உரம் தேவை இல்லை என அறிக்கையிடப்பட்டு கண் துடைப்பிற்கு வெறும் 40 மூடை உரம் வருகின்றது. 

மாவட்ட அரச அதிபரான திருமதி.ரூபவதி கேதீஸ்வரனோ மாவட்டத்தின் நீர் அளவையொட்டி முதலில் தீர்மானிக்கப்பட்ட அளவினைவிட 5ஆம் மாதம் மேலும் 2 ஆயிரத்து 500 கெக்டேயர் விதைப்பு அனுமதிக்கப்பட்டது. அதனால் அவை  தற்போது சிறு பயிராகவே இருக்கும். இந்த அளவிற்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ யூரியா தேவை என்ற விபரத்தினை நாமும் அனுப்பியிருந்தோம். இருப்பினும் 40 மூடையை தீர்மானித்தமை தொடர்பில் எமக்கும் ஏதும் தெரியாது என்றார்.

No comments