பத்தரமுல்லையில் பதுங்கிய கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.

இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே  இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக் கோஷமெழுப்பி, ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் அவ்விடத்திலேயே நிற்கிறது. தலைக்கவசம் கீழே விழுந்து கிடக்கிறது.

பொலிஸ் அதிகாரியோ, போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிக்கின்றார்.  

அவர், மஹரகமவில் வைத்தே, போராட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார்.


No comments