பேத்தையும் சவாரி சைக்கிளில்!

 


சவாரி தம்பரின் நாம்பனை பார்த்து தனது பேத்தயைனையும் சவாரிக்கு விட்ட கதையாக யாழ்பாணத்தில் சைக்கில் பேரணி நடந்து முடிந்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக வாசலில் சிலர் மட்டும் பேரணியாக(?) புறப்பட்டு நகரை சென்றடைந்துள்ளனர்.

எனினும் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி ஜேவிபிஇமுன்னிலை சோசலிசக்கட்சிஇமார்க்சிச லெனீனிசிய கட்சி இகூட்டமைப்பின் ஒரு சாரார் என 50 பேர் வரையில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே தெற்கில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். கோட்டா கம போராட்ட மைதானத்தை நோக்கிச் செல்ல வந்த போராட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை அகற்றி அதனை நோக்கிச் செல்ல முயன்றனர்.

இதன்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் உயர் அழுத்த நீரை பிரயோகித்துள்ளனர்.

No comments