கோத்தா உத்தரவு:நிமால் வீட்டிற்கு!



துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.

.அதற்கமைய அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுமாறு இலங்கை ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலகவுள்ளதாக இலங்கை  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments