திருமலை:தப்பிக்க முற்பட்ட 45பேர் கைது!கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments