வெளிநாட்டு நாயணங்களுடன் ஒருவர் கைது!


17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெலிகமை கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோ, 645 ஸ்ரேலிங் பவுண்ட், 100,000 ஜப்பானிய யென், 1,000 கட்டார் றியால், 18,500 திர்ஹாம் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

No comments