ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது!
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சுகயீனமுற்றிருப்பதாக சட்டத்தரணி ஊடாக கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 13 ஆம் திகதி அவர் பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகில் தங்கி மக்களை அந்த இடத்திற்கு வருமாறு பல்வேறு வழிகளில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வீதித் தடைகளை உடைக்கும் பணியில் அங்கிருந்த மக்களுடன் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments