கோட்டாவின் பதவி விலகல் கடிதம்! நடனமாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்


இலங்கையில் தனது ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச, ஜனாதிபதிப் பதவிலிருந்து பதவி விலகியுள்ளார்.  செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள போதிலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜபக்ச கடிதத்தை புதன்கிழமை மாலை சபாநாயகருக்கு மின்னஞ்சல் செய்திருந்தார், ஆனால் அது சரிபார்க்கப்பட்ட பின்னர், சில சிக்கல்கள் குறித்து அட்டர்னி ஜெனரலுடன் கலந்துரையாடப்படுகிறது.

சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தின் அங்கீகாரத்தை ராஜபக்சே உறுதி செய்திருந்தாலும், அது தொடர்பான சட்டப்பூர்வ விவாதங்கள் இன்னும் நடந்து வருகின்றன.

புதிய நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக அவர் பதவி விலகுவதற்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேற விரும்பியதாக நம்பப்படுகிறது.

கோட்டாபாயவின் பதவி விலகல் கடிதம் கிடைத்து என்ற செய்தி அறிந்த  ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழ்ச்சியில் நடனமாடி வரவேற்றனர்.

No comments