ஜனாதிபதி மாளிகை முற்றகையின் பின் தொடரும் பதவி விலகல்கள்


முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். 

தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜூன் 24ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்று இரு வாரங்களின் பின் பதவி விலகியுள்ளார்.

நேற்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதேபோன்று உடன் அமுலாகும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அறிவித்துள்ளனர் .

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிக்கையொன்றில் அவர்கள் அறிவித்துள்ளனர். 

No comments