ஜனாதிபதி மாளிகையில் சமையல் மும்முரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷ எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள போதும் அவர் கதிரையிலிருந்து வெளியேறும் வரை ஜனாதிபதி மாளிகையிலிருந்து விலகவோ கைவிடவோ போவதில்லையென போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத்தீர்மானத்தை சபாநாயகர் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி பதவி விலக முடிவுச்செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக சபாநாகர் கூறியிருந்தார்.

எனினும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் தங்கியுள்ள போராட்டகாரர்கள் இன்றைய தினம் சமயலில் குதித்துள்ளனர். அதே போன்று காலை முதல் ஜனாதிபதி மாளிகையினை துப்புரவு செய்துள்ளனர்.


No comments