ரணிலின் வீட்டுக்குத் தீவைப்புடன் மூவர் கைது!


கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு நேற்றிரவு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கல்கிசையைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கடவத்தை மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 28 வயதுடைய இருவருமே அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் 5வது வீதியில் உள்ள பிரதமர் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் நேற்று இரவு அமைதியின்மையின் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழுவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.  


No comments