சஜித் பின்வாங்கினார்: டலஸ் வெல்ல வாய்ப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் டளஸ் அழகப்பெரும பிரிவினருக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. 

இதன்படி ஜனாதிபதித் தேர்தலிலிருந்து சஜித் பிரேமதாச வாபஸ் பெறுகின்றார். அதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் டளஸ் வெற்றிபெற்றால் சஜித் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பதுதான் தேர்தல் உடன்பாடு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாராளுமன்றத்தில் சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார எம்.பி. வழிமொழிந்தார்.

மேலும், அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார் அதனை ஹரிணி அமரசூரிய எம்.பி வழிமொழிந்தார்.

இதன்படி ரணில், அனுர, டளஸ் என தேர்தல் மும்முனைப் போட்டியாக இடம்பெறும். நாளை காலை பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெறும்.

No comments