சுதந்திரக்கட்சியிலும் பிளவு: ரணிலா? டலஸா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தை இன்று மாலை கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கும் எனத் தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே, மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான சாமர சம்பத் தசநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இந்த விஷேட மத்திய குழு கூட்டத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய மத்திய குழு கூட்டத்தின் பின் தமது ஆதரவு யாருக்கு என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments