சிங்கள தேசத்திற்கும் உள்ளக விசாரணை!சிங்கள தேசத்திற்கு இலங்கை இராணுவத்தின் பண்பாடு புரிய தொடங்கியுள்ள நிலையில் வடகிழக்கில் சிங்கள இராணுவ கொலைகளை நினைவுகூர தொடங்கியுள்ளனர் செயற்பாட்டாளர்கள்.

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம்தொடர்பில் இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரி ஒருவர் பெற்றோல் நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், சிவிலியனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார் .

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன என்பவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments