டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! ஆயுததாரி கைது!


டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் (ஃபீல்டின் ஷாப்பிங் மாலில்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

தாக்குதலில் 17 வயதுடைய இரண்டு டேனிஷ் குடிமக்களும், 47 வயதான ரஷ்ய குடிமகனும் கொல்லப்பட்டனர்.

ஆயுதம் தாக்கிய 22 வயதுடைய ஆயுததாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், பயங்கரவாத நோக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அவரிடம் துப்பாக்கியும் கத்தியும் இருந்தது. இத்தாக்குதலை அவர் தனியாக நடத்தியதாகவும் , அவருக்குப் பின்னால் வேறு யாரும் இருக்கவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments