சஜித்-மைத்திரி அவசர பேச்சு

 


கோத்தா-ரணில் கூட்டிற்கு பதிலாக  சஜித்-மைத்திரி கூட்டை உருவாக்க திரைமறைவில் சந்திரிகா மும்முரமாகியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று நாட்டின் ஜனாதிபதி மக்களின் கண்ணில் படுவது கூட இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு சுயமாக முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தளவு நெருக்கடியில் இருக்கும் போது ஜனாதிபதி பொதுமக்கள் மத்தியில் வருவதில்லை மக்கள் கண்களில் படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

No comments