மருந்துகள் மீண்டும் கடல் வழியே!



 இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளிற்கான தட்டுப்பாடு உச்சமடைந்துள்ள தமிழ்நாடு, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திக் கொண்டு வர இருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை இந்திய காவல்துறை கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி,  திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து மாத்திரைகளை கடத்தவிருத்த நிலையில் படகில் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் படகு மற்றும் மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு , மஞ்சள், ஏலக்காய், கடலட்டை மற்றும் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில், தற்போது அத்தியாவசிய மருந்து மாத்திரைகளும் கடத்தப்படுவது ஆரம்பமாகியுள்ளது.


No comments