காலிமுகத்திடல்:கரை ஒதுங்கும் உடலங்கள்!அடையாளம் காணப்படாத இறந்த  உடல் காலிமுகத்திடல் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை காலி முகத்திடல் கடற்கரையில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இறப்புக்கான காரணம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர் சுமார் 20 வயதுடையவர் எனவும் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments