பதவி விலகினார் பிரித்தானியப் பிரதமர்


பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பிரதமர் மீது நம்பிக்கையில்லை எனத் தெரிவித்து நிதி அமைச்சரான ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பதவி விலகியிருந்தனர். இவார்கள் பதவி விலகி கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.

இந்நிலையில் நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜோன்சன் பதவி விலகியுள்ளார் புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

No comments