மரணம்.ஜனனம் அனைத்தும் வரிசையிலே!

 
எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.

அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென சுகயீனமுற்ற அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்துடன் இன்றைய நாளின் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது

வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

​அதன்பின்னர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பெண்ணை வைத்தியாலையில் அனுமதித்தனர். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

No comments