இலங்கை: நோண்டுகின்றது தனியார் போக்குவரத்து!

இன்று  திங்கட்கிழமை (04) 10 வீதமான தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் காஞ்சனா மற்றும்  சிபெட்கோ தலைவர் இருவரும், எங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் மூலம் போதுமான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் சிபெட்கோ ஞாயிற்றுக்கிழமை இயங்காது. எனவே, எரிபொருள் விநியோகம் நடைபெறவில்லை.

 எனவே, இது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். இன்று (03) குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படும் நாளாகும்.  “திங்கட்கிழமை (04) எங்களால் முழுமையாக செயல்பட முடியாது. நாங்கள் 10 சதவீதத்தை இயக்க முயற்சிப்போம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

No comments