வருகின்றது மகாசங்கத்தின் சர்வகட்சி ஆட்சி!இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“மக்களின் எதிர்ப்பு  தோன்றியுள்ள நிலையில், மகா சங்கத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும்.  இல்லையேல் மக்கள் வீதிக்கு வந்து நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்”என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments