கொழும்பில் காவல்துறை துப்பாக்கி சூடு!

கொழும்பின் பெட்டா, பாஸ்டியன் வீதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (04) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் 41 வயதான எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

சந்தேகநபர் கம்பஹாவில் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று காலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரை பொலிஸார் கண்டுபிடித்ததையடுத்து, அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.  பொலிஸாரின் பதில் தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்தேக நபர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments