மன்னாரில் 9பேர்:தொண்டமனாறில் 4பேர் கைது!

 


இலங்கையிலிருந்து  தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 9 பேர் மன்னாரில்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்பாடு கடற்பகுதியூடாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட  7 பேரும் அவர்களை ஏற்றிச் செல்ல உதவிய இரு படகு ஓட்டிகளுமாகவே மொத்தம் 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் வவுனியா மாவட்டத்தையும் மூவர் பதுளை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.

இதனிடையே தொண்டமனாறு பகுதியில் இருந்து  படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது. படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments