தொடங்கியது ரணிலின் எலிவேட்டை!முன்னணி போராட்டகாரர்களை ரணில் ராஜபக்ச அரசு வேட்டையாடத்தொடங்கியுள்ளது.

கோத்தபாய இலங்கை திரும்பவுள்ள நிலையில் போராட்டகாரர்களை 1971இ1989 போல முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டனிஸ் அலி என்கிற சிவில் செயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தின் உள்ளே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். “எனக்கு எதிராகப் பயணத்தடை இருக்குமாக இருந்தால் விமானத்துக்குள் வருவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் வைத்து தன்னை கைது செய்திருக்கலாமே... கைது செய்வதற்கான ஆவணங்கள் இருந்தால் அதிகாரிகள் அதனைக் காண்பிக்க வேண்டும்.” எனவும் தான் கைது செய்யப்படும்போது அதிகாரிகளிடம் டனிஸ் அலி கோருவதையும் காணமுடிகிறது.

இதற்கு எதற்கும் பதிலளிக்காத அதிகாரிகள் விமானத்தின் உள்ளே ஆசனத்தில் அமர்ந்திருந்த டனிஸ் அலியை கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


No comments