கைதுக்கு எதிர்ப்பு: ஐ.நா அலுவலகம் முன் போராட்டம்!


ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர்களைக் கைது செய்து செய்தமையைக் கண்டித்து சிறீலங்காவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சிறீலங்காவில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதியியில் இம்மாதம் முதல் வாரத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரனிந்து சேனாரத்ன, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதில் 7 பேர் நேற்றுப் புதன்கிழமை மருதான காவல்நிலையத்தில் சட்டவாளர்கள் ஊடக சரணடைந்திருந்தனர். அவர்கள் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்ட 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments