பெற்றோல் வரிசை: யாழிலும் ஒரு மரணம்!

நாள் தோறும் அரங்கேறிவரும் எரிபொருள் நிரப்பு நிலைய மோதல்களால் யாழிலும் இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்.நகர எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவனே சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்.

உயிரிழந்தவர் உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) எனத் தெரியவந்துள்ளது.

இம்மரணத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய 11வது மரணமாக இம்மரணம் அமைந்துள்ளது.

இதனிடையே தென்னிலங்கையின் அங்குருவதொட்ட, படகொட பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், வரிசையில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு தனது வாகனத்திற்கு டீசல் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் டிப்பர் பாரவூர்தியில் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார். .இந்தநிலையில் இந்த இறப்புக்களில் பெரும்பாலானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளன.


No comments